Thursday, June 2, 2011

கவிதைகள்



உன் மீது
நான் வைத்திருக்கும் 
அதீத அன்பு 
எனக்குள்ளிருக்கும் 
தாய்மையை 
வெளிக்கொணர்ந்தது !!! 



நீயும் எனக்கொரு 
தாய் தான்
என்னை 
கவிஞனாக பிரசவித்ததால் !!!


துயரங்கள்   தான்  நம்மை 
பட்டை  தீட்டுகின்றன 
ஆம்   
உன்னை  பிரிய நேரிடுமோ  
என்ற  எண்ணம்தானே 
என்னையும்  கவிஞன்  ஆக்கியது !!!...


நானும் 
கண்ணாடிதான்
உன்னுடைய 
உணர்வுகளை 
பிரதிபலிப்பதால் ...




முத்தம் 

கரையை 
முத்தமிட முயன்று 
தோற்கும் 
அலையைப் போல 
உன்னை 
முத்தமிட முயலும் 
நானும் 
தோற்று கொண்டுதானிருக்கிறேன் ...